-
ஸ்ரீ உலக நாயகி அம்பாள் திருக்கோவில் +91 63699 69125 | sriyogamayasakthipeedam@gmail.com
| தேதி | கிழமை | அருள்வாக்கு |
|---|---|---|
| 22-4-2022 | வெள்ளி | பகிர்விலே வாழ்வு மகிழ்வே! நிகர் தர்மம் வேறு எதுவே மகனே! |
| 19-4-2022 | செவ்வாய் | நல்லது நடக்கும் மகனே! அல்லது அடங்கும் மகனே! |
| 15-4-2022 | வெள்ளி | மறவாத மனமே! மகிழ்ச்சி தான் தினமே! |
| 12-4-2022 | செவ்வாய் | மன வலியை நோடியில்-உன் மன வலிமையாக ஆக்கிடுவேன்! |
| 8-4-2022 | வெள்ளி | எதிர்த்து வாழலாம் மகனே-யாரையும், எதிர்பார்த்து வாழலாமா? நான் இருக்கும் போது! |
| 5-4-2022 | செவ்வாய் | செய்யும் செயலும் ஜெயமே! பொய்யே ஆகும் உன் பயமே! |
| 1-4-2022 | வெள்ளி | சரீர, மன வலியும் நீங்கும்! புரிகிற தவ வலிமையும் பொங்கும்! |
| தேதி | கிழமை | அருள்வாக்கு |
|---|---|---|
| 29-3-2022 | செவ்வாய் | காலங்கருதி சுருக்கி சொன்னேன்! காலத்தாலே அறிந்து கொள்வாய் மகனே! |
| 25-3-2022 | வெள்ளி | காரணமில்லா கலக்கம்-இத் தருணத்தில் மாறும்! |
| 22-3-2022 | செவ்வாய் | மௌன ஏகாந்த நிலையில் இரு! தினம் ஆத்ம ஞானத்தை பெறு! |
| 18-3-2022 | வெள்ளி | எல்லாம் எனக்கேயென அர்ப்பணித்தால், நல்லதை நாட்டுவேன், தீயதை ஓட்டுவேன்! |
| 15-3-2022 | செவ்வாய் | மனம் ஆசையை விளைவிக்கும் -அறிவு தினம் ஞானத்தை விளைவிக்கும்! |
| 11-3-2022 | வெள்ளி | அறியமாட்டேன் என செய்த பாவம், நீ அறிந்துணர்ந்தால், அன்றே அகற்றிடுவேன் |
| 8-3-2022 | செவ்வாய் | என்னை அன்னை என்றழைத்தாய்! உன்னை பிள்ளை யென்று காப்பேன்! |
| 4-3-2022 | வெள்ளி | உபாதையான சிந்தை செயல் வேண்டா_எம் போதையில் கானம் பாடு, களிப்பை ஈட்டு! |
| 1-3-2022 | செவ்வாய் | நினைக்காத மனதில் நானில்லை! நினைக்கும் மனதில் துயரில்லை! |
| தேதி | கிழமை | அருள்வாக்கு |
|---|---|---|
| 25-2-2022 | வெள்ளி | சரித்திரம் படைப்பேனடி! சமுத்திரத்தையும் தாண்டி நிற்பேனடி! |
| 22-2-2022 | செவ்வாய் | நாவினால் ருசி மட்டுமா? -புகழ் பேசு, ஆசை கை வசமாகும்! |
| 18-2-2022 | வெள்ளி | நிராதரவென ஏன் எண்ணுகிறாய்? பேராதரவுடன் உன்னருகே நான் மகனே! |
| 15-2-2022 | செவ்வாய் | வேத மந்திரம் எதற்கு? நம் கானமே உனக்கு! மதுர கானம் மயக்கம் எனக்கு! |
| 11-2-2022 | வெள்ளி | என் கொடி எங்கும் பறக்கும்! என் புகழ் இம்மண்ணில் சிறக்கும்! |
| 8-2-2022 | செவ்வாய் | தரும் குணம் எமக்குண்டு! விரும்பும் குணம் உமக்குண்டு! |
| 4-2-2022 | வெள்ளி | வளையோசை சலங்கை ஒலி கேட்கும் நாளை எதிர் நோக்கிரு மகனே! |
| 1-2-2022 | செவ்வாய் | விதை சிறியது, விருட்சம் பெரியது! போதை பீரிடும், எனை நீ நினைக்க! |
| தேதி | கிழமை | அருள்வாக்கு |
|---|---|---|
| 25-1-2022 | செவ்வாய் | ஆணவமற்ற தர்மம் பக்தி, தூணாக நிற்கும் உன் வாழ்வில்! |
| 21-1-2022 | வெள்ளி | நம்பும் மனதில் உள்ளேன்! எண்ணும் காரியம் முடிப்பேன்! |
| 18-1-2022 | செவ்வாய் | ஊரணியிலே நீருண்டு! கழனியிலே நெல்லுணடு! தரணியிலே சுகமுண்டு! காரணியாக உனக்கு நானுண்டு! |
| 14-1-2022 | வெள்ளி | நீ நினைக்காவிடிலும் உனை தேடியே வருகிறேன்! |
| 11-1-2022 | செவ்வாய் | அல்லும் பகலும் அங்கலாய்ப்பு எதற்கு! சொல்லும் வார்த்தையில் உன் வாழ்விருக்கு! |
| 7-1-2022 | வெள்ளி | சத்திய பாதையில் தான் பக்தி இருக்கும்! பத்தியமிருந்தால் ஆரோக்கியமிருக்கும்! |
| 4-1-2022 | செவ்வாய் | மோதிய மத்தால் வரும் வெண்ணெய்! ஓதிய நாமத்தால் வரும் நன்மை! |
| தேதி | கிழமை | அருள்வாக்கு |
|---|---|---|
| 31-12-2021 | வெள்ளி | வெள்ளாமை வீறு கொண்டு வளரும்! வெப்பு நோய் வராது தளரும்! மனைகள் தோறும் மங்களம் வரும்! மக்களிடம் மகிழ்வு தரும் புத்தாண்டில் பூரிப்பு தருவேன்! ! |
| 28-12-2021 | செவ்வாய் | என் கண்கள் உனை காக்கும்! உன் கண்கள் எனை உற்று நோக்கும்! |
| 24-12-2021 | வெள்ளி | கனவும் கை கூடும்-என் நினைவில் நீ வாடும் போது! |
| 21-12-2021 | செவ்வாய் | இன் முகம் காட்டிய தர்மத்தை விட, இன் சொல் பெரிய தர்மமாகும் மகனே! |
| 17-12-2021 | வெள்ளி | தஞ்சமென வந்த பின்னே, அஞ்சி நிற்பதேனடா? |
| 14-12-2021 | செவ்வாய் | முகத்தில் இனியவர், நெஞ்சில் வஞ்சகர்! உன் அகத்தில் அடையாளம் காட்டுவேன் மகனே! |
| 10-12-2021 | வெள்ளி | கனிவானவர் எப்போதும் எம்மருகே, அல்லார் அகலுவர்! தோணி போகும், துறைமுகம் போகுமா? |
| 7-12-2021 | செவ்வாய் | நாடகப் பாத்திரம் நீயடா! ஆட வைப்பது நானடா! |
| 3-12-2021 | வெள்ளி | பனி பொழிந்து குழி நிறையுமா? இனிய சொல் பசி போக்குமா? மனம் கனிந்த எம் நினைவு முழு நிறைவாகுமே! |
| தேதி | கிழமை | அருள்வாக்கு |
|---|---|---|
| 30-11-2021 | செவ்வாய் | காலமும் மாறும்-உன் கோலமும் மாறும்-என் சூலமும் உனை காக்கும்! |
| 26-11-2021 | வெள்ளி | ஆதவனால் மலரும்_எம்மால் ஆனந்தம் மலரும்! |
| 23-11-2021 | செவ்வாய் | அவனியிலே, கூனி குறுகிய நிலை உனக்கில்லை! பவனி வரும் பல்லக்கில் நீ மகனே! |
| 19-11-2021 | வெள்ளி | கனவிலும் நானே மகனே-உன் நினைவிலும் நான் எனில், நீ என் மகனே! |
| 16-11-2021 | செவ்வாய் | மனதை வாட்டிய உன் கவலையை, மறு நொடியில் மாற்றுவேன் மகனே! |
| 12-11-2021 | வெள்ளி | திரவு கோலுண்டு இன்பத்திற்கே! எனை மறவாத மனதினர்க்கே! |
| 9-11-2021 | செவ்வாய் | காருண்யம், கனிவு, தர்மம் யாவும் மறு ஜென்மத்தை மாற்றமே! |
| 5-11-2021 | வெள்ளி | பக்தி எனும் பூமியிலே சக்தி விதை மரமா? உரமா? |
| 2-11-2021 | செவ்வாய் | மனமே நீ மகிழ்ந்திரு! தினமே எனை புகழ்ந்திரு! |
| தேதி | கிழமை | அருள்வாக்கு |
|---|---|---|
| 29-10-2021 | வெள்ளி | உறவு உனக்கு வேறு யாரு? கூறுவது யாவும் என் பேரு! |
| 26-10-2021 | செவ்வாய் | கற்றவன் காண்பான் அறிவு! மற்றவன் தொழுது பெறுவான் ஞானம்! |
| 22-10-2021 | வெள்ளி | தீபத்தில் சாம்பலாய் போனதே பாபம் என மகிழ்ந்து கொண்டாடுவோம் இந்நாளே! ஓம் சக்தி பராசக்தி! |
| 19-10-2021 | செவ்வாய் | என்னை இல்லை என்போரிடம் ஏன் இணக்கம்! கண்ணாக காப்பேன் என்பதில் இல்லை சொணக்கம்! |
| 15-10-2021 | வெள்ளி | விழுதாக நானிருப்பேன்! நிழலாக உடனிருப்பேன்! |
| 12-10-2021 | செவ்வாய் | பொருள் மகிழ்ச்சி தரும்-எம் அருள் நிம்மதி தரும்! |
| 8-10-2021 | வெள்ளி | கர்மத்தை களைந்திடு! உன்னுடன் நான் இருப்பேன்-என் பார்வையில் நீ இருப்பாய்! |
| 5-10-2021 | செவ்வாய் | வரியது நீங்க, பக்தி எனும் வீரிய விதையை விதை மகனே! |
| 1-10-2021 | வெள்ளி | தர்மத்தில் தழைத்திடு! தர்மத்தை களைந்திடு! |
| தேதி | கிழமை | அருள்வாக்கு |
|---|---|---|
| 28-9-2021 | செவ்வாய் | சத்வ குணம், சாந்த மனம், மிதமான உணவும் உச்சமாகுமே! |
| 24-9-2021 | வெள்ளி | தவிர்ப்பது பேரும் ஆசையும், குவிந்து விடும் தானாகவே! |
| 21-9-2021 | செவ்வாய் | எது வரினும் இடர் படேல்- பக்தியில் மது உண்ட வண்டாக இரு! |
| 17-9-2021 | வெள்ளி | துச்சமென்று என்னருகில் இருடா! அச்சம் உனக்கு ஏனடா |
| 14-9-2021 | செவ்வாய் | கரியின் கால் கட்டு வேதனை வேண்டா, புரியும் சாதனை எம்மாலன்றோ! |
| 10-9-2021 | வெள்ளி | அசையா நம்பிக்கையாலே, திசையாவும் உன் வசமாகுமே! |
| 7-9-2021 | செவ்வாய் | என் பரிவு பெற்ற மக்களுக்கு, அச்சமும் உண்டோ? |
| 3-9-2021 | வெள்ளி | காயான மனம் கனிவாகும்! ஓயாத துன்பம் ஓடிப்போகும்! |
| தேதி | கிழமை | அருள்வாக்கு |
|---|---|---|
| 31-8-2021 | செவ்வாய் | தாமதப்படுவதாலும், உயர்வு உண்டு! விவாதமின்றி வெற்றியுமுண்டு! |
| 27-8-2021 | வெள்ளி | மஞ்சளிலே மகிமை உண்டு மகனே. நெஞ்சிலே நினைப்பது நடப்பதுண்டு |
| 24-8-2021 | செவ்வாய் | விரைவு எண்ணம் ஏன்? -கால விரையமும் ஏன் மகனே! |
| 20-8-2021 | வெள்ளி | சிரித்தும் மௌனித்தும், அன்பு புரிந்தும், அனுபவம் பெற்று ஜெயிக்கவும்! |
| 17-8-2021 | செவ்வாய் | கடுத்தமான காலத்தையும் கடத்திடுவேன்! தடுத்துக் காரியத்தையும் நடத்திடுவேன்! |
| 13-8-2021 | வெள்ளி | ஏனோ மன தவிப்பு? -நானே தினம் வழி நடத்துவேன் மகனே! |
| 10-8-2021 | செவ்வாய் | தவ, உபவாசம், வேண்டா-மனதில் தேவ வாசம் போதும் மகனே! |
| 6-8-2021 | வெள்ளி | தீயிலே எரிந்து போகும் உன் பாவம், தீமித்தாலே பரிசுத்தமாகும்! |
| 3-8-2021 | செவ்வாய் | சத் சிந்தனையாளரோடு கூடு! தெய்வ நிந்தனையாளரோடு ஏன் உறவு! |
| தேதி | கிழமை | அருள்வாக்கு |
|---|---|---|
| 30-7-2021 | வெள்ளி | பசித்தோர்க்கு பசி ஆற்றி, பேசித்தேற்றி, தர்மக்கொடியேற்று! |
| 27-7-2021 | செவ்வாய் | வியப்பதுவே என் அன்பு! ஜெயிப்பதுவே உன் வாழ்வு! |
| 23-7-2021 | வெள்ளி | உள்ளார் உள்ளத்தில் உள்ளேன்! கள்ள உள்ளத்தில் நில்லேன்! |
| 20-7-2021 | செவ்வாய் | உன்னுள் உற்று பார் மகனே! மனதுள் எனை உணர்வாய்! |
| 16-7-2021 | வெள்ளி | தேவையை குறைத்து-எளிமை வாழ்வை நடாத்து மகனே! |
| 13-7-2021 | செவ்வாய் | நிமிர்ந்த நெஞ்சினனாயிரு! திமிர் கொண்ட தோளாயி ஓம் சக்தியென இரு! |
| 9-7-2021 | வெள்ளி | அசாதாரணமான காரியங்களையும், சாதாரணமாக முடித்து தருவேன்! |
| 6-7-2021 | செவ்வாய் | நட்பாக நீ எனக்கு மகனே! காப்பாக நான் உனக்கு எப்போதுமே! |
| 2-7-2021 | வெள்ளி | அழியாத செல்வம் யாது? உன் வழி வழியாக வரும் தர்மமாகும்! |
| தேதி | கிழமை | அருள்வாக்கு |
|---|---|---|
| 29-6-2021 | செவ்வாய் | உன்னுடனே எப்போதும் நானிருக்கிறேன்! பின்னும் மறைப்பதேன், உன்னாசையை! |
| 25-6-2021 | வெள்ளி | பகை விலகும்-வெற்றி சபை வரவேற்கும் மகனே! |
| 22-6-2021 | செவ்வாய் | வாலைப்பிடி, வேலை ப்பிடி, சூலைப்பணி, நாளும் இனிதே! |
| 18-6-2021 | வெள்ளி | உனதென்று எண்ணாதே கவலையை , எனதென்று எண் மகனே! |
| 15-6-2021 | செவ்வாய் | விசைப்பொழுதிலே, உன் ஆசையும் அசைவும் நிறைவாகும்! |
| 11-6-2021 | வெள்ளி | ஆறுதலான வார்த்தை தர்மமாகும்! கூறும் வார்த்தை நம்மை காக்கும்! |
| 8-6-2021 | செவ்வாய் | உறவாலே உயர்வல்ல-ஆசை துறவாலே உயர்வாகும்! |
| 4-6-2021 | வெள்ளி | அறிஞனுடன் கூட அறிஞனாவாய்! பக்தனுடன் கூட என் பக்தனாவாய்! |
| 1-6-2021 | செவ்வாய் | உருகும் மனமே, உனக்கு அருகே நான் இருக்கிறேன்! |