-
ஸ்ரீ உலக நாயகி அம்பாள் திருக்கோவில் +91 63699 69125 | sriyogamayasakthipeedam@gmail.com
தேதி | கிழமை | அருள்வாக்கு |
---|---|---|
22-04-2022 | வெள்ளிக்கிழமை | பகிர்விலே வாழ்வு மகிழ்வே! நிகர் தர்மம் வேறு எதுவே மகனே! |
19-04-2022 | செவ்வாய்க்கிழமை | நல்லது நடக்கும் மகனே! அல்லது அடங்கும் மகனே! |
15-04-2022 | வெள்ளிக்கிழமை | மறவாத மனமே! மகிழ்ச்சி தான் தினமே! |
12-04-2022 | செவ்வாய்க்கிழமை | மன வலியை நோடியில்-உன் மன வலிமையாக ஆக்கிடுவேன்! |
08-04-2022 | வெள்ளிக்கிழமை | எதிர்த்து வாழலாம் மகனே-யாரையும், எதிர்பார்த்து வாழலாமா? நான் இருக்கும் போது! |
05-04-2022 | செவ்வாய்க்கிழமை | செய்யும் செயலும் ஜெயமே! பொய்யே ஆகும் உன் பயமே! |
01-04-2022 | வெள்ளிக்கிழமை | சரீர, மன வலியும் நீங்கும்! புரிகிற தவ வலிமையும் பொங்கும்! |
தேதி | கிழமை | அருள்வாக்கு |
---|---|---|
29-03-2022 | செவ்வாய்க்கிழமை | காலங்கருதி சுருக்கி சொன்னேன்! காலத்தாலே அறிந்து கொள்வாய் மகனே! |
25-03-2022 | வெள்ளிக்கிழமை | காரணமில்லா கலக்கம்-இத் தருணத்தில் மாறும்! |
22-03-2022 | செவ்வாய்க்கிழமை | மௌன ஏகாந்த நிலையில் இரு! தினம் ஆத்ம ஞானத்தை பெறு! |
18-03-2022 | வெள்ளிக்கிழமை | எல்லாம் எனக்கேயென அர்ப்பணித்தால், நல்லதை நாட்டுவேன், தீயதை ஓட்டுவேன்! |
15-03-2022 | செவ்வாய்க்கிழமை | மனம் ஆசையை விளைவிக்கும் -அறிவு தினம் ஞானத்தை விளைவிக்கும்! |
11-03-2022 | வெள்ளிக்கிழமை | அறியமாட்டேன் என செய்த பாவம், நீ அறிந்துணர்ந்தால், அன்றே அகற்றிடுவேன் |
08-03-2022 | செவ்வாய்க்கிழமை | என்னை அன்னை என்றழைத்தாய்! உன்னை பிள்ளை யென்று காப்பேன்! |
04-03-2022 | வெள்ளிக்கிழமை | உபாதையான சிந்தை செயல் வேண்டா_எம் போதையில் கானம் பாடு, களிப்பை ஈட்டு! |
01-03-2022 | செவ்வாய்க்கிழமை | நினைக்காத மனதில் நானில்லை! நினைக்கும் மனதில் துயரில்லை! |
தேதி | கிழமை | அருள்வாக்கு |
---|---|---|
25-02-2022 | வெள்ளிக்கிழமை | சரித்திரம் படைப்பேனடி! சமுத்திரத்தையும் தாண்டி நிற்பேனடி! |
22-02-2022 | செவ்வாய்க்கிழமை | நாவினால் ருசி மட்டுமா? -புகழ் பேசு, ஆசை கை வசமாகும்! |
18-02-2022 | வெள்ளிக்கிழமை | நிராதரவென ஏன் எண்ணுகிறாய்? பேராதரவுடன் உன்னருகே நான் மகனே! |
15-02-2022 | செவ்வாய்க்கிழமை | வேத மந்திரம் எதற்கு? நம் கானமே உனக்கு! மதுர கானம் மயக்கம் எனக்கு! |
11-02-2022 | வெள்ளிக்கிழமை | என் கொடி எங்கும் பறக்கும்! என் புகழ் இம்மண்ணில் சிறக்கும்! |
08-02-2022 | செவ்வாய்க்கிழமை | தரும் குணம் எமக்குண்டு! விரும்பும் குணம் உமக்குண்டு! |
04-02-2022 | வெள்ளிக்கிழமை | வளையோசை சலங்கை ஒலி கேட்கும் நாளை எதிர் நோக்கிரு மகனே! |
01-02-2022 | செவ்வாய்க்கிழமை | விதை சிறியது, விருட்சம் பெரியது! போதை பீரிடும், எனை நீ நினைக்க! |
தேதி | கிழமை | அருள்வாக்கு |
---|---|---|
28-01-2022 | வெள்ளிக்கிழமை | வளையோசை சலங்கை ஒலி கேட்கும் நாளை எதிர் நோக்கிரு மகனே! |
25-01-2022 | செவ்வாய்க்கிழமை | ஆணவமற்ற தர்மம் பக்தி, தூணாக நிற்கும் உன் வாழ்வில்! |
21-01-2022 | வெள்ளிக்கிழமை | நம்பும் மனதில் உள்ளேன்! எண்ணும் காரியம் முடிப்பேன்! |
18-01-2022 | செவ்வாய்க்கிழமை | ஊரணியிலே நீருண்டு! கழனியிலே நெல்லுணடு! தரணியிலே சுகமுண்டு! காரணியாக உனக்கு நானுண்டு! |
14-01-2022 | வெள்ளிக்கிழமை | நீ நினைக்காவிடிலும் உனை தேடியே வருகிறேன்! |
11-01-2022 | செவ்வாய்க்கிழமை | அல்லும் பகலும் அங்கலாய்ப்பு எதற்கு! சொல்லும் வார்த்தையில் உன் வாழ்விருக்கு! |
07-01-2022 | வெள்ளிக்கிழமை | சத்திய பாதையில் தான் பக்தி இருக்கும்! பத்தியமிருந்தால் ஆரோக்கியமிருக்கும்! |
04-01-2022 | செவ்வாய்க்கிழமை | மோதிய மத்தால் வரும் வெண்ணெய்! ஓதிய நாமத்தால் வரும் நன்மை! |
தேதி | கிழமை | அருள்வாக்கு |
---|---|---|
31-12-2021 | வெள்ளிக்கிழமை | வெள்ளாமை வீறு கொண்டு வளரும்! வெப்பு நோய் வராது தளரும்! மனைகள் தோறும் மங்களம் வரும்! மக்களிடம் மகிழ்வு தரும் புத்தாண்டில் பூரிப்பு தருவேன்! ! |
28-12-2021 | செவ்வாய்க்கிழமை | என் கண்கள் உனை காக்கும்! உன் கண்கள் எனை உற்று நோக்கும்! |
24-12-2021 | வெள்ளிக்கிழமை | கனவும் கை கூடும்-என் நினைவில் நீ வாடும் போது! |
21-12-2021 | செவ்வாய்க்கிழமை | இன் முகம் காட்டிய தர்மத்தை விட, இன் சொல் பெரிய தர்மமாகும் மகனே! |
17-12-2021 | வெள்ளிக்கிழமை | தஞ்சமென வந்த பின்னே, அஞ்சி நிற்பதேனடா? |
14-12-2021 | செவ்வாய்க்கிழமை | முகத்தில் இனியவர், நெஞ்சில் வஞ்சகர்! உன் அகத்தில் அடையாளம் காட்டுவேன் மகனே! |
10-12-2021 | வெள்ளிக்கிழமை | கனிவானவர் எப்போதும் எம்மருகே, அல்லார் அகலுவர்! தோணி போகும், துறைமுகம் போகுமா? |
07-12-2021 | செவ்வாய்க்கிழமை | நாடகப் பாத்திரம் நீயடா! ஆட வைப்பது நானடா! |
03-12-2021 | வெள்ளிக்கிழமை | பனி பொழிந்து குழி நிறையுமா? இனிய சொல் பசி போக்குமா? மனம் கனிந்த எம் நினைவு முழு நிறைவாகுமே! |
தேதி | கிழமை | அருள்வாக்கு |
---|---|---|
30-11-2021 | செவ்வாய்க்கிழமை | காலமும் மாறும்-உன் கோலமும் மாறும்-என் சூலமும் உனை காக்கும்! |
26-11-2021 | வெள்ளிக்கிழமை | ஆதவனால் மலரும்_எம்மால் ஆனந்தம் மலரும்! |
23-11-2021 | செவ்வாய்க்கிழமை | அவனியிலே, கூனி குறுகிய நிலை உனக்கில்லை! பவனி வரும் பல்லக்கில் நீ மகனே! |
19-11-2021 | வெள்ளிக்கிழமை | கனவிலும் நானே மகனே-உன் நினைவிலும் நான் எனில், நீ என் மகனே! |
16-11-2021 | செவ்வாய்க்கிழமை | மனதை வாட்டிய உன் கவலையை, மறு நொடியில் மாற்றுவேன் மகனே! |
12-11-2021 | வெள்ளிக்கிழமை | திரவு கோலுண்டு இன்பத்திற்கே! எனை மறவாத மனதினர்க்கே! |
09-11-2021 | செவ்வாய்க்கிழமை | காருண்யம், கனிவு, தர்மம் யாவும் மறு ஜென்மத்தை மாற்றமே! |
05-11-2021 | வெள்ளிக்கிழமை | பக்தி எனும் பூமியிலே சக்தி விதை மரமா? உரமா? |
02-11-2021 | செவ்வாய்க்கிழமை | மனமே நீ மகிழ்ந்திரு! தினமே எனை புகழ்ந்திரு! |
தேதி | கிழமை | அருள்வாக்கு |
---|---|---|
29-10-2021 | வெள்ளிக்கிழமை | உறவு உனக்கு வேறு யாரு? கூறுவது யாவும் என் பேரு! |
26-10-2021 | செவ்வாய்க்கிழமை | கற்றவன் காண்பான் அறிவு! மற்றவன் தொழுது பெறுவான் ஞானம்! |
22-10-2021 | வெள்ளிக்கிழமை | தீபத்தில் சாம்பலாய் போனதே பாபம் என மகிழ்ந்து கொண்டாடுவோம் இந்நாளே! ஓம் சக்தி பராசக்தி! |
19-10-2021 | செவ்வாய்க்கிழமை | என்னை இல்லை என்போரிடம் ஏன் இணக்கம்! கண்ணாக காப்பேன் என்பதில் இல்லை சொணக்கம்! |
15-10-2021 | வெள்ளிக்கிழமை | விழுதாக நானிருப்பேன்! நிழலாக உடனிருப்பேன்! |
12-10-2021 | செவ்வாய்க்கிழமை | பொருள் மகிழ்ச்சி தரும்-எம் அருள் நிம்மதி தரும்! |
08-10-2021 | வெள்ளிக்கிழமை | கர்மத்தை களைந்திடு! உன்னுடன் நான் இருப்பேன்-என் பார்வையில் நீ இருப்பாய்! |
05-10-2021 | செவ்வாய்க்கிழமை | வரியது நீங்க, பக்தி எனும் வீரிய விதையை விதை மகனே! |
01-10-2021 | வெள்ளிக்கிழமை | தர்மத்தில் தழைத்திடு! தர்மத்தை களைந்திடு! |
தேதி | கிழமை | அருள்வாக்கு |
---|---|---|
28-09-2021 | செவ்வாய்க்கிழமை | சத்வ குணம், சாந்த மனம், மிதமான உணவும் உச்சமாகுமே! |
24-09-2021 | வெள்ளிக்கிழமை | தவிர்ப்பது பேரும் ஆசையும், குவிந்து விடும் தானாகவே! |
21-09-2021 | செவ்வாய்க்கிழமை | எது வரினும் இடர் படேல்- பக்தியில் மது உண்ட வண்டாக இரு! |
17-09-2021 | வெள்ளிக்கிழமை | துச்சமென்று என்னருகில் இருடா! அச்சம் உனக்கு ஏனடா |
14-09-2021 | செவ்வாய்க்கிழமை | கரியின் கால் கட்டு வேதனை வேண்டா, புரியும் சாதனை எம்மாலன்றோ! |
10-09-2021 | வெள்ளிக்கிழமை | அசையா நம்பிக்கையாலே, திசையாவும் உன் வசமாகுமே! |
07-09-2021 | செவ்வாய்க்கிழமை | என் பரிவு பெற்ற மக்களுக்கு, அச்சமும் உண்டோ? |
03-09-2021 | வெள்ளிக்கிழமை | காயான மனம் கனிவாகும்! ஓயாத துன்பம் ஓடிப்போகும்! |
தேதி | கிழமை | அருள்வாக்கு |
---|---|---|
31-08-2021 | செவ்வாய்க்கிழமை | தாமதப்படுவதாலும், உயர்வு உண்டு! விவாதமின்றி வெற்றியுமுண்டு! |
27-08-2021 | வெள்ளிக்கிழமை | மஞ்சளிலே மகிமை உண்டு மகனே. நெஞ்சிலே நினைப்பது நடப்பதுண்டு |
24-08-2021 | செவ்வாய்க்கிழமை | விரைவு எண்ணம் ஏன்? -கால விரையமும் ஏன் மகனே! |
20-08-2021 | வெள்ளிக்கிழமை | சிரித்தும் மௌனித்தும், அன்பு புரிந்தும், அனுபவம் பெற்று ஜெயிக்கவும்! |
17-08-2021 | செவ்வாய்க்கிழமை | கடுத்தமான காலத்தையும் கடத்திடுவேன்! தடுத்துக் காரியத்தையும் நடத்திடுவேன்! |
13-08-2021 | வெள்ளிக்கிழமை | ஏனோ மன தவிப்பு? -நானே தினம் வழி நடத்துவேன் மகனே! |
10-08-2021 | செவ்வாய்க்கிழமை | தவ, உபவாசம், வேண்டா-மனதில் தேவ வாசம் போதும் மகனே! |
06-08-2021 | வெள்ளிக்கிழமை | தீயிலே எரிந்து போகும் உன் பாவம், தீமித்தாலே பரிசுத்தமாகும்! |
03-08-2021 | செவ்வாய்க்கிழமை | சத் சிந்தனையாளரோடு கூடு! தெய்வ நிந்தனையாளரோடு ஏன் உறவு! |
தேதி | கிழமை | அருள்வாக்கு |
---|---|---|
30-07-2021 | வெள்ளிக்கிழமை | பசித்தோர்க்கு பசி ஆற்றி, பேசித்தேற்றி, தர்மக்கொடியேற்று! |
27-07-2021 | செவ்வாய்க்கிழமை | வியப்பதுவே என் அன்பு! ஜெயிப்பதுவே உன் வாழ்வு! |
23-07-2021 | வெள்ளிக்கிழமை | உள்ளார் உள்ளத்தில் உள்ளேன்! கள்ள உள்ளத்தில் நில்லேன்! |
20-07-2021 | செவ்வாய்க்கிழமை | உன்னுள் உற்று பார் மகனே! மனதுள் எனை உணர்வாய்! |
16-07-2021 | வெள்ளிக்கிழமை | தேவையை குறைத்து-எளிமை வாழ்வை நடாத்து மகனே! |
13-07-2021 | செவ்வாய்க்கிழமை | நிமிர்ந்த நெஞ்சினனாயிரு! திமிர் கொண்ட தோளாயி ஓம் சக்தியென இரு! |
09-07-2021 | வெள்ளிக்கிழமை | அசாதாரணமான காரியங்களையும், சாதாரணமாக முடித்து தருவேன்! |
06-07-2021 | செவ்வாய்க்கிழமை | நட்பாக நீ எனக்கு மகனே! காப்பாக நான் உனக்கு எப்போதுமே! |
02-07-2021 | வெள்ளிக்கிழமை | அழியாத செல்வம் யாது? உன் வழி வழியாக வரும் தர்மமாகும்! |
தேதி | கிழமை | அருள்வாக்கு |
---|---|---|
29-06-2021 | செவ்வாய்க்கிழமை | உன்னுடனே எப்போதும் நானிருக்கிறேன்! பின்னும் மறைப்பதேன், உன்னாசையை! |
25-06-2021 | வெள்ளிக்கிழமை | பகை விலகும்-வெற்றி சபை வரவேற்கும் மகனே! |
22-06-2021 | செவ்வாய்க்கிழமை | வாலைப்பிடி, வேலை ப்பிடி, சூலைப்பணி, நாளும் இனிதே! |
18-06-2021 | வெள்ளிக்கிழமை | உனதென்று எண்ணாதே கவலையை , எனதென்று எண் மகனே! |
15-06-2021 | செவ்வாய்க்கிழமை | விசைப்பொழுதிலே, உன் ஆசையும் அசைவும் நிறைவாகும்! |
11-06-2021 | வெள்ளிக்கிழமை | ஆறுதலான வார்த்தை தர்மமாகும்! கூறும் வார்த்தை நம்மை காக்கும்! |
08-06-2021 | செவ்வாய்க்கிழமை | உறவாலே உயர்வல்ல-ஆசை துறவாலே உயர்வாகும்! |
04-06-2021 | வெள்ளிக்கிழமை | அறிஞனுடன் கூட அறிஞனாவாய்! பக்தனுடன் கூட என் பக்தனாவாய்! |
01-06-2021 | செவ்வாய்க்கிழமை | உருகும் மனமே, உனக்கு அருகே நான் இருக்கிறேன்! |