-
ஸ்ரீ உலக நாயகி அம்பாள் திருக்கோவில் +91 63699 69125 | sriyogamayasakthipeedam@gmail.com
"வாடிய வதனத்தை வாழ வைப்பேன்" என்ற அன்னையின் அருள்வாக்கின் படி ஸ்ரீ யோக மாயா சக்தி பீடம் அறக்கட்டளை 2004 லில் அமைக்கப்பட்டு ஏழை எளிய மக்களுக்கு உணவளிப்பதையும், மருத்துவ முகாமிடுவதையும் குறிக்கோளாகக் கொண்டு அன்னையிட்ட பணியினை இன்றுவரை வெகு சிறப்பாக அறக்கட்டளை நடத்தி வருகிறது. கோசாலை , கல்விச் சேவை முதலியவைகளில் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டுமென அம்பாள் கட்டளையிட்டுள்ளாள்.
ஸ்ரீ உலக நாயகி அம்பாள்
அருள் தரும் ஸ்ரீ உலக நாயகி துணை பக்தி மிகுந்த பாரத நாட்டில் அருள் பொழியும் நாடாக விளங்குவது 19 நூற்றாண்டில் ஸ்ரீ ஆதி உலகநாயகி அம்பாள் திருக்கோவில் சிதிலமடைந்த நிலையில் இருந்தது. 1978 ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் அம்பாளின் அருளால் நல்ல முறையில் நடந்தேறியது. அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் 1982, 1994, 2006 ஆகிய ஆண்டுகளில் வெகு விமர்சையாக நடைபெற்றன. தீந்தமிழ்நாடு எனப்பெருமை பெற்ற தமிழ் நாட்டில் அருள் வழங்க அன்னை அருள்தரும் "ஸ்ரீ உலக நாயகி அம்பாள்" கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் நான்குநேரி ஆகும் தொன்று தொட்டே ஆலயம் கட்டி தெய்வ வழிபாடு நடந்து வந்த போதிலும், இந்த கலியுகத்தில் பக்தர் ஒருவர் மனதில் தோன்றி தனக்கென்று இருந்த ஒரு கோவிலை புதுப்பித்துக் கட்டி அதனுள் அன்புடன் தானிருந்து மற்றும் ஒருவரை தன்னை உபாசிக்கச் செய்து அவர் மூலமாக மக்களுக்கு அருள் பாலிக்கும் முகமாக தோன்றியதே "நான்குநேரி அருள் தரும் "ஸ்ரீ உலக நாயகி அம்பாள் திருக்கோவில்" ஆகும். ஐயப்பன் என்பது ஐயம் தவிர்ப்பவர் என்றோ அல்லது தன்னை நாடி வரும் பக்தர்களின் ஐயத்தை தவிர்க்க வேண்டும் என்று மனதில் கொண்டு தானே என்னவோ அன்னை தான் அருள் பாலிக்க திரு. ஐயப்பன் என்ற பெயரில் உபாசகரை தேர்ந்தெடுத்தாள் போலும்.
சக்திதாசன் மூலமாக அன்னை தன்னை பரிபூரணமாக நம்புகின்றவர்களுக்கும், ஏழை எளியவர்களுக்கும் அருள் பாலிக்க வேண்டியே, தான் கோவில் கொண்டிருப்பதாகவும், முகமதியர் காலம் தொட்டே இங்கு இருப்பதாகவும் பாலகனை தொட்டிலில் இருந்த காலம் முதல் இப்பணி செய்யக் காத்து வந்தேன் என இனிய மொழி பகர்ந்தார். உபவாசகர் ஐயா திரு. ஐயப்பனிடம், அம்பாள் தனக்கு புதியதொரு இடத்தில் கோவில் கட்டவேண்டும் எனவும் நான்குனேரியில் வரப்போகும் நான்கு வழி சாலையில் இருந்து உள்ளிருக்கும் எனவும், அதற்கடையாளமாக கருநாகமொன்று அவ்விடத்தில் படமெடுத்து நிற்கும் எனவும், அதுவே யாம் குடி கொள்ளும் இடமென்றும் அருள்வாக்கில் கூறினாள். உபவாசகர் ஐயா திரு ஐயப்பன் நேரில் சென்று பார்க்கும் பொழுது அம்பாள் கூறியபடி குழாயின் மீது கருநாகமொன்று இருந்தது. அவ்விடத்தை அடைந்தவுடன் அங்கு மட்டும் தூவானமாக மழை பொழிந்தது. அம்பாள் பூவானமாக பொழிந்து தன் சம்மத்தைத் அருளினாள். அருள் வாக்கில் இவ்விடத்தில் நாற்கர சாலை வரும் எனவும், அதன் அருகில் கோவில் வந்துவிடும் எனவும், பதினெட்டு கரமுடையாள் 72 அடி உயரத்தில் அம்பாள் வீற்றிருப்பாள் எனவும் கூறினாள். இதற்கு சாட்சியாக வீரமணிதாசன் பாடி 2004 வெளிவந்த "ஏ ஆயி…" என்னும் குறுந்தகடு பாடலின் வரிகள் உள்ளன, அவ்வரிகள் "நாலு பாதை கூடுகின்ற நங்கை நகரிலே ஒரு நல்ல குறி சொல்லுவதில் உனக்கு நிகரில்லை" அவ்வண்ணமே கோவில் கட்டி கும்பாபிஷேகம் 2006 ஆம் ஆண்டு சிறந்த முறையில் நடந்தேறியது. மன்னர்கள், தேவர்கள், பூதங்கள் கட்டியதும் வரலாற்றில் உண்டு . சாமானியர் கோவில் கட்டுவதற்கு பாலகன் ஐயப்பனை நியமித்தது அவர்களின் பூர்வ புண்ணியமே. ஆகவே பக்த கோடிகள் அனைவரும் அன்னை "அருள்தரும் ஸ்ரீ உலக நாயகி அம்பாள்" தரிசனத்துடன் அம்பாளின் அருள் ஆசி பெற்று அருள் வாக்கிற்கு பாத்திரமாக வேண்டுகிறோம்.
பதினெண் கரமுடையாள் (அஷ்டாதச புஜ துர்க்கா) வட கிழக்கில் இருக்கும் கொல்கத்தா காளி தென் தமிழகத்தில் நெல்லைக் காளியாக அமைந்திருக்கிறாள். தில்லைக் காளி நெல்லையில் எல்லைக் காளியாக அமையவிருப்பது பக்தர்களின் வேண்டுகோளே அன்றி வேறு என்னவாக இருக்க முடியும். தென்னகத்தில் காளி தென்முகமாக அமைவது இன்னும் சிறப்பு. இத்தலத்தின் மண்ணை மிதித்தவர்களுக்கு மரண பயம் நீங்கி, கடன் தொல்லைகள் களைந்து, பிள்ளை கலி தீர்த்து, பில்லி சூனியங்களை அகற்றி, பிணிகளை விலக்கி வாழ்வில் வளம்பெறச் செய்கிறாள்.
அஷ்டாதச புஜ துர்க்கா
அருள் வாக்கில் இவ்விடத்தில் நாற்கர சாலை வரும் எனவும், அதன் அருகில் கோவில் வந்துவிடும் எனவும், பதினெட்டு கரமுடையாள் 72 அடி உயரத்தில் அம்பாள் வீற்றிருப்பாள் எனவும் கூறினாள் பதினெட்டு கரமுடையாள் நெல்லையின் எல்லையில் நான்குனேரியில் நெல்லையில் அடையாளமாய் அம்பாள் அருள்வாக்கு கூறிய படி சுமார் 72 அடியில் எழுந்தருள உள்ளாள். அதற்கான கட்டுமானப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. விரைவில் கட்டுமானப் பணிகள் முடிந்து அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் அம்பாள் அருளால் நடைபெற உள்ளது. அன்பர்கள் அனைவரும் தங்களால் முடிந்த காணிக்கைகளை நன்கொடையாக வழங்கி அம்பாளின் அருளுக்கு பாத்திரமாக வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நாம் ஒரு செயலை ஆரம்பிக்கும் போது தடையாக வரும் வினைகளை தடுத்தருள வேண்டி பிள்ளையாரை வணங்கி ஆரம்பிப்போம். ஏதாவது ஒன்றை எழுத தொடங்கும் போது பிள்ளையார் சுழியிட்டே எழுத ஆரம்பிப்போம். எந்த ஒரு யாகமானாலும் ஹோமமானாலும் ஒரு மந்திரத்தை உபயோகிக்கும் முன் கணபதியை வணங்கி ஆரம்பிக்க வேண்டும். பிள்ளையாரின் திருவுருவமே ஓம் என்னும் பிரணவ மந்திரத்தினை ஒத்த வடிவமாக இருக்கிறது. பிள்ளையார் தேவர்கள், மானுடர்கள் மற்றும் ஆறாம் சிந்தையற்ற விலங்குகள் ஆகியவை கலந்த கலவை உள்ளது. வணங்கும் முறை கூட மிகவும் எளிமையானதாக்கும்.
முருகன் என்ற சொல் அழகு என்ற அர்த்தத்துடன் மிகத் தொன்மையானது. முருகன் இத்தலத்து பாலமுருகன் சானித்தியம் கொண்ட ஒரு புராதனமான சிலை ஆகும். புன்முறுவல் புரிய பேசும் தெய்வம். நின்ற நிலையிலேயே சிரசை சாய்த்து அஷ்டாதசபுஜ அம்பாளை பார்த்து ரசிப்பது போல் உள்ளது. பூரித்த நிலையிலேயே வேண்டும் பக்தர்களுக்கு வேண்டிய வரம் வாரித் தருகிறார். நாமும் ஆறு எழுத்து மந்திரத்தை அனுதினமும் ஓதி பலன் பெறுவோமாக!! பாலகனும் அன்னையிடம் சிபாரிசு செய்து நம் வேண்டுதலை ஜெய்த்துக் கொடுப்பராக!!
திரேதாயுகத்தில் வாழ்ந்த சிவபக்தனான குஞ்சரன் என்பவர் குழந்தை வரம் கேட்டு ஈஸ்வரனை நோக்கித் தவம்புரிந்தார். ‘சர்வலட்சணமும் கொண்ட அழகிய மகள் உனக்குப் பிறப்பாள். அவளுக்கு பிறக்கும் மகன் எனது அம்சமாக தோன்றி வலிமையும், வீரமும் கொண்டு சிரஞ்சீவியாக வாழ்வான்’ என்று ஈசன் வரமளித்து மறைந்தார். ஈசனின் அருளால் குஞ்சரனுக்கு பிறந்த மகள், அஞ்சனை என்ற திருநாமம் கொண்டு வளர்ந்தாள். மணப்பருவம் அடைந்த அஞ்சனை, கேசரி என்னும் வானர மன்னரை மணந்துகொண்டாள். திருமணம் முடிந்தும் அஞ்சனைக்கு புத்திர பாக்கியம் இல்லாமல் இருந்தது. தர்மதேவதை கூறியவாறே திருமலைக்கு சென்று கடும் தவம் இருந்தாள் அஞ்சனை. பஞ்சபூதங்களும் வியக்கும் வண்ணம் அவள் இருந்த தவம் கண்டு வாயு தேவன் மகிழ்ந்தார். ஈசனின் ஆணைப்படி அஞ்சனையின் தவத்தை மெச்சி வாயுதேவன் ஓர் அற்புதக்கனியை பரிசளித்து ஆசிர்வதித்தார். அந்த கனியை உண்ட அஞ்சனை கருவுற்றாள். மார்கழி மாத மூல நட்சத்திர நன்னாளில் அனுமன் அவதரித்தார். சிவசக்தி அருளால் தோன்றிய அனுமன், வாயுபுத்திரன், அஞ்சனை மைந்தன், ஆஞ்சநேயன் என்று திருப்பெயர்கள் கொண்டார். வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் அனுமன் விரதம் இருப்பது சிறப்பானது. எல்லா நாள்களை விடவும் அனுமன் ஜனித்த இந்த அனுமன் ஜெயந்தியில் அவரை வேண்டி விரதம் இருப்பது சகல சவுபாக்கியங்களையும் பெற்று தரும் என்பது நம்பிக்கை.
கோவில் மட்டும் சிலை கட்டுமானத்திற்கான செலவுகள் இவ்விடம் கொடுக்கப்பட்டுள்ளன. முடிக்கவேண்டிய திருப்பணி வேலைகள் பட்டியலிடப்பட்டுள்ளன . பக்தர்கள் தாராளமாக நன்கொடைகள் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்